வெள்ளி, 24 செப்டம்பர், 2010

ஆய்வேடு

  1. ஒருவரால் எழுதப்படும் அறிக்கையை அல்லது ஆய்வுரையை குறிப்பது ஆய்வேடு ஆகும்.
  2. ஆய எடுக்கும் பொருளையும், அதை அவர் நிலைநாட்டுவதையும் குறிப்பது ஆய்வேடு என்னும் சொல்லின் பொருளாகும்.
  3. ஆய்வேட்டின் தொடக்கம் ஒ சிக்கலுக்குத் தீர்வு காணத் தொடங்குவது.
  4. அதன் மையப்பகுதி ஆய்வுரை வாசகம் ஒரு கருதுகோள் ஆகும்

ஆய்வு முடிபுகள்

  • மெய்ம்மைகள், கொள்கை விதிகள், பொதுநீர்மைகள் என்பன.




  • அறிவு எனினும் அறிவியல் எனினும் ஒன்றே (நாலெட்ஜ், சயின்ஸ் ஒரே பொருளுடையன)



  • சோதனையிடப்பட்டதும் ஒழுங்குபடுத்தப்பட்டதுமான அறிவு அறிவியல் எனப்படும்.




  • மெய்ம்மை சார்ந்த ஆதாரச் சான்றுகளை ஒழுங்காகவும், வரன்முறையாகவும் தொடர்புபடவும் நிரல்பெற வைப்பதே அறிவு, அறிவியல்.




  • ஆய்வு மதிப்புகள்




  • தொழிற்புரட்சி ஏற்பட்ட இந்த மூன்று நூற்றாண்டுகளையும் ஆய்வுயுகம் எனக் குறிப்பிடலாம்.




  • அறிலியல் புரட்சியின் வாயிலாக ஆய்வுகள் பல்கிய காலம் இது.




  • எளிமை மனப்பான்மையும் விடா முயற்சியுமே உயராய்வின் அடிப்படைகள் எனலாம்.



  • ஆய்வின் பயனாக,




  • சில விதிகளையும் கொள்கை மரபுகளையும் காணுதல்



  • புதிய கருத்தமைதிகளையும் உயர் தரங்களையும் காணுதல்



  • நிகழக் கூடியனவற்றை முன்கூட்டிக் கண்டறிதல்



  • ஆய்வாளனின் பணி வேறுபாடுகளை ஒன்றிணைப்பதேயாகும்.
  • அறிவியலாய்வின் இருவகை

    1. அடிப்படை ஆய்வு,
    2.  பயன்பாட்டாய்வு
    அணுவைப் பிளக்கலாம் என்பது அடிப்படை ஆய்வு.
    அதிலிருந்து விண்வெளிக் கலமும், அணுகுண்டும் கண்டது பயன்பாட்டாய்வு.
    ஆய்வு வேறுபாடு முறை பற்றியதன்று. முடிவு பற்றியதுமன்று. நோக்கம் பற்றியதேயாகும்.
    பயன்பாட்டாய்வு வாணிக வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பயன்படும். அது ஆய்வுக்கட்டுரைக்கு அடித்தளமாகாது.
    இலக்கியத் துறையில் ஆய்வு
    முதன்மை ஆய்வு, துணைமை ஆய்வு என இருவகையாகும்.
    தொல்காப்பியரைப் போல, நன்னூலார் போல கொள்கை விதிகளைக் கண்டறிந்து கூறுபவரே .ஆய்வாளரெனில் நாம் ஆய்வாளர்கள் ஆக இயலாது.
    அவர்கள் செய்ததை முதன்மை ஆய்வு எனவும் நாம் செய்வதைத் துணைமை ஆய்வு எனவும் குறிப்பிடலாம்.
    முதன்மை ஆய்வுகளுக்கே நோபல் பரிசு வழங்கப்படுதலால் அவ்வகை ஆய்வும் குறைந்து விடவில்லை.
    17
    பொருளியல் துறையில் மால்தூசியன் மக்கட்தொகைக் கொள்கை அடிப்படை ஆய்வாகும்.
    அக்கொள்கையைக் கொண்டு பல்வேறு நாட்டிலுள்ள சிக்கல்களை ஆய்வது பயன்பாட்டாய்வாகலாம்.
    பாடலுட் பயின்றவை நாடுங்காலை, பாடல் சான்ற புலனெறி வழக்கம்
    புலன் நன்குணர்ந்த புலமையோரே
    யாப்பென மொழிப யாப்பறி புலவர் எனத் தொல்காப்பியர் அத்துறை சார்ந்த முன்னோடிகளை மதித்துக் கூறுவது அவர் தமக்கு முன்னிகழ்ந்த ஆய்வனைத்தையும் அறிந்திருப்பதைச் சுட்டுகிறது.
    18
    தமிழின் ஆய்வுகள் பகுப்பாய்வு விளக்கமுறை பற்றியன.
    பகுப்பாய்வுகள் வெறும் சித்தாந்தங்களாகவோ, விளக்கவுரைகளாகவோ நின்று விடாமல் புதிய மெய்ம்மைகளைக் கண்டறிந்து சொல்ல வேண்டும்- ஆய்வு விதி.
    தமிழ் ஆய்வுகள் இன்று உள்ளதை விளக்குவனவாக அமைகின்றன.
    19
    ஆய்வுப் பயன்
    சமுதாய முன்னேற்றமாகிய பொதுநலனைக் கருதிய ஆய்வுகளே மதிக்கத்தக்கவை.
    இலக்கியம், கலை ஆகிய துறைகளிலும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற ஆய்வுகளே பயன் தருவன.
    20
    ஆய்வுப் பயன் உண்மை காணுதலும், சமுதாயப் பயன்பாடும் என்பதை மறத்தல் கூடாது.
    அறிவியலை வளர்த்தவர்கள் தனிப்பட்ட சிந்தனையாளர்களும் ஆய்வறிஞர்களுமேயாவர்.
    அறிவு வளர்ச்சிக்கோ, மனித வாழ்வுக்கோ பயன்படாத ஆய்வுகள் சிறப்புடையன ஆகா.
    ஆய்வு தோன்றுமிடம்
    சிக்கல் தோன்றுமிடத்தில் தீர்வு காணும் ஆர்வமும் ஆய்வும் தோன்றுகிறது.
    வாழ்வில் சிக்கல்களைத் தீர்பதில் மக்கள் காட்டும் உறுதிப்பாடே ஆய்வு பிறக்கக் காரணம் எனலாம்.
    எச்சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் ஆய்வு தேவை.
    அழிவைத் தூண்டும் சக்திகளையும் ஆக்கத்திற்கு மாற்றி விடும் வழியில் மேற்கொண்டு வெற்றி பெற்றால், இன்பம் காண இயலும்.

    ஆய்விற்கு அடிப்படை

  • தரவுகளைச் சேகரிக்க வேண்டும்




  • செய்ம்முறைகளை பேட்டி, வினாத்தாள், முதலியவற்றின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.




  • இதற்குக் கள ஆய்வும் தேவைப்படுகிறது.




  • உய்த்துணர் முறை ஆய்வு என்னும் ஓர் ஆய்வு முறையை யாரும் பெரிதும் போற்றுவதில்லை.




  • உய்த்துணர்வு முறை இலக்கிய, இலக்கண, பண்பாட்டு ஆய்வுகளிலும், தொல்பொருள், கல்வெட்டாய்வுகளிலும் பயன்படுகின்றன.




  • அறிவியலாய்வுக்குப் பயன்படும் சான்றுகளைப் போலக் கலையியல் ஆய்வுக்குப் பயன்படும் சான்றுகள் வலிவுடையன அல்ல.




  • எந்த ஆய்விலும் மூல ஆதாரங்களை நேரடியாகப் பெற்று நாடலை மேற்கொள்ளுவதே சிறந்தது நம்பத் தகுந்தது.




  • ஆய்வு வகைகள்

  • அறிவியலாய்வு, இலக்கிய ஆய்வு என இருவகை.




  • பகுப்பாய்வு, செயல் முறை ஆய்வு என்பதும் ஒருவகை.




  • இதற்கு முன்பேயுள்ள சான்று அல்லது தரவுகளை ஆராய முடியும்.




  • ஆய்வு மரபு.







  • பிறருடைய ஆய்வுத் திறன் காணும்பொழுதில் பாராட்டும் மனப்பான்மை இருக்க வேண்டும்.



  • தம்மில் சிறிய பதவியுடையவரிடமும் ஆய்வுத் திறன் வெளிப்படுத்தும் திறனிருப்பின் போற்ற வேண்டும்.



  • ஆய்வுத் திறமையைப் பாராட்ட மறுப்பதும் தவறு ஆகும்.



  • ஆய்வு நாட்டம் இலாதவரை பட்டம் கருதி வானளாவப் புகழ்வது பெருந்தவறு.



  • இக்குறைகளை நீக்குவதே ஆய்வுப் பண்பாடு ஆகும்.



  • செய்யக்கூடாத தவறுகள்



  • பிறர் கருத்தை மேற்கோளாகச் சுட்டலாம்; ஆனால் தம்கருத்துப் போல வெளியிடக் கூடாது.



  • ஆய்வுத் துறையில் திருட்டு என்பது அறிவுத் திருட்டு எனக் கொள்ளப் பெறும்.



  • இது மிகுந்த தண்டனை தரப்பட வேண்டியதாகும்.



  • ஆணவம், மீயுயர் மனப்பான்மை, தற்செருக்கு ஆய்வுக்கு ஆகாததாகும்.



  • எளிமை, அடக்கம், தற்சார்பின்மை ஆய்வை வளர்க்கும்.



  • காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்



  • ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்



  • உற்றகுணம் தோன்றா தாகும்; உவப்பதன்கண்



  • குற்றமும் தோன்றாக் கெடும் (முனைப்பாடியார் அறநெறிச்சாரம் 41)



  • நடுநிலை சான்ற ஆய்வறத்தைச் சுட்டும் இது.



  • ஆய்வு முடிவுகள்:

    ஆய்வு முடிவுகள் புதிய மெய்ம்மைகளையும் புதிய கொள்கை விதிகளையும் தரவேண்டும்.
    புதிய கண்டுபிடிப்புகளை புதிய முடிபுகளை வெளிப்படுத்த வேண்டும்.
    பழைய கொள்கைகள் மாற்றம் பெறவோ, புதிய கொள்கைகள் வகுக்கப் பெறவோ, புதிய கொள்கைள் ஏற்படுத்தப்படவோ வேண்டும்.
    நாம் காணும் மெய்ம்மைகள் முன்னதாக யாரிடத்தும் எவ்விடத்தும் கண்டு வெளிப்படுத்தப்படாதனவாகவும் இருக்க வேண்டும்.
    முன்னதையே திரும்பவும் கூறுவதோ, விரிவுபடுத்தி விளக்குவதோ ஆய்வாகாது.
    புதுவதாகக் காண்கிற முடிபுகளை நோக்கிய நெறிமுறைகளே (றிக்ஷீஷீssமீs ஷீயீ பீவீsநீஷீஸ்மீக்ஷீவீஸீரீ sஷீனீமீtலீவீஸீரீ ஸீமீஷ்) எனப்படும். (தொல்காப்பியர் தந்த புதுமுறை இதுவாகும். அகப்பாடல்கள் இயற்பெயரோ, அது தொடர்பான மறைமுகக் குறிப்புகளோ, நெடுநல்வாடை பாடல் கேள்விக்கு உரியதாகவும், கொள்ளுதல்)
    எவை எவை ஆராய்ச்சி என்பதும் எவை எவை ஆராய்ச்சி அல்ல என்பதும் ஒன்று எனினும் எதிர்மறை முகம் என்று இதைக் குறிப்பிடுவர்.
    முன்பே அறியப்பட்ட ஆய்வுகளை வைத்துக் கொண்டு கவனத்தை ஈர்ப்பது ஆய்வாகாது.
    13
    முன்பே வெளிப்படுத்தப்பட்ட மெய்ம்மைகளின் விளைவு ஆய்வாகாது.
    சித்தாந்தங்களை (ஞிஷீநீtக்ஷீவீஸீமீs) அடுக்கிக் கொண்டே செல்வதும், கணித்தறியக் கூடிய மெய்ம்மைகளைப் பேசாமல் விட்டு விடுவதும் ஆய்வாகாது.
    ஆய்வு நோக்கமின்றி எழுதப்படும் கட்டுரைகளும் ஆய்வாகா.
    சிறந்த ஆய்வுத் திறனுக்கே பட்டம்
    டாக்டர் பட்டம் பெறாத அறிஞர்களும் உண்டு. இளம்பூரணர், மறைமலையடிகள், திரு.வி.க. விபுலானந்த அடிகள், இளவழகனார், மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள்.
    ஆய்வறிஞராயின் ஆய்வுக்கட்டுரைகள் அண்மையில் வெளிவந்துள்ளனவா என்று காண்பர்.
    மற்ற துறைகளுக்கு இணையாய்த் தமிழ் ஆய்வும் வளருவதற்கு ஆய்வியல் அணுகுமுறை மிகுந்த அவசியமாகும்.
    ஆய்வு நாகரிகம்
    ஒருவர் கருத்தை அவருடையதென்றே கூறுவதும், தம் கருத்தை மாற்றிக் கொள்ள ஆயத்தமாய் இருப்பதும் ஆய்வு மரபு.

    ஆய்வும் ஆய்வேடும்

    ஆய்வு என்பதன் சொல்லும் பொருளும்
    ஆய்வு - ஏதேனும் ஒன்றை மிக்க கவனத்தோடும் விடா முயற்சியோடும் நுட்பமாய்த் தேடுவது
    அந்த ஒன்று என்பது பல புதிய மெய்ம்மைகளைச் சுட்டும்.
    அத்தகைய அடிப்படையான மெய்ம்மைகளைத் தேடிக் காண்பதே ஆய்வாகும்
    ரிசர்ச் என்னும் ஆங்கிலச் சொல் சிசெர்ச்சர் என்னும் பிரெஞ்சு மொழியின் வழிப்பட்டதாகும்.
    இதற்குத் தேடுதல் என்று பொருள்.
    ஒன்றைப் பற்றி நுணுக்கமாகத் தேடும் திறன் - தேடுதல்
    உண்மையைக் கண்டறிய உந்துகிற நாட்டம் ஆய்வு
    எப்பொருள் பற்றியும், அதன் மெய்ம்மைத் தன்மை கண்டறிகிற உத்தி பற்றியும், அறிவியல் முறையிலான புலனாய்வுக்கும்  ஆய்வு என்று பெயர்.
    ஆய்வு ஆதாரங்களை சொந்தமாகவும் நேரடியாகவும் கற்று உணர வேண்டும்.
    ஆய்தல் என்ற சொல்லுக்குத் தமிழில் உள்ளதன் நுணுக்கம் என்று பொருள். (தொல்காப்பியம், 813)
    இது முன்பு உள்ளதொன்றை மேலும் நுணுகுதல் என்று பொருள்படும்.
    ஆய்இழை எனில் மிக நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன் என்று பொருள்.
    ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை - என்னும்போது நண்பர்களை நுட்பமாகத் தேடி ஆராய்ந்து கொள்ள வேண்டும் எனத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். (திருக்குறள் 792)



    உலக வழக்கில் கீரையை ஆய்க.
    ஆய்தல் என்பதும் ஆராய்தல் என்பதும் ஒன்றேயாகும்.
    ஆர் என்பதற்கு அரிய என்னும் பொருளும் உள்ளதால் ஆய்வும் அரிய வகையாகவே ஆயிற்று. ஆரதர் = ஆர் + அதர் = ஆர் என்பது அரிய; அதர் என்பது வழி.
    திருவள்ளுவர் ஆராய்ந்த சொல்வன்மை, ஆராய்ந்த கல்வி என்னும் இருவகைகளை மெய்ப்பாட்டில் குறிக்கிறார்.
    இதில் ஆராய்ச்சி என்பதும் ஒரு மெய்ப்பாடாகும். (தொல்காப்பியம் -1206)
    இளம்பூரணர் உரை - ஆராய்தல் எனினும், தேர்தல் எனினும், நாடல் எனினும் ஒக்கும் (தொல்காப்பியர் இளம்பூரணர் உரை:- தொல், பொருள், மெய்ப்பட்டியல் நூல் 12.)

    ஆய்வியல் ஆய்வுமுறைக் கல்வி


    கற்றதும் கற்றதை வெளியிடுவதும் ஆய்வாகும். 
    ஆய்வுகள் எழுதியும் எடுத்துரைத்தும் கற்கும் கல்வி
    மாணவர்களின் படைக்குணர்வு மேலோக்கம்
    தேனீக்களைப் போலத் தமக்குத் தேவையான சான்றுகளைத் தேடும் பழக்கம் வேண்டும்
    எதிர்நின்று பலர் வினாக்களுக்குப் பதில் சொல்லும் திறனை வளர்த்தல்
    ஆர, அமர நன்கு சிந்திப்பதற்குக் காலமும் சூழலும் ஏற்படுத்துதல்
    ஆய்வு வாய்ப்புகளும் பட்டங்களும்
    ஒரு துறையில் அல்லது ஒரு நூலில் தனித்திறன் பெறவேண்டும்
    அனைத்து ஆய்வேடுகளையும் தமிழில் தரலாம்
    ஆய்வுரைகள், ஆய்வேடுகள், திட்டக்கட்டுரைகள், கருத்தரங்கவுரைகள், திட்டச் செயல்பாட்டு அறிக்கைகள்
    ஆய்வு நெறி விளக்கம் - வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்கு