வெள்ளி, 24 செப்டம்பர், 2010

ஆய்வு முடிவுகள்:

ஆய்வு முடிவுகள் புதிய மெய்ம்மைகளையும் புதிய கொள்கை விதிகளையும் தரவேண்டும்.
புதிய கண்டுபிடிப்புகளை புதிய முடிபுகளை வெளிப்படுத்த வேண்டும்.
பழைய கொள்கைகள் மாற்றம் பெறவோ, புதிய கொள்கைகள் வகுக்கப் பெறவோ, புதிய கொள்கைள் ஏற்படுத்தப்படவோ வேண்டும்.
நாம் காணும் மெய்ம்மைகள் முன்னதாக யாரிடத்தும் எவ்விடத்தும் கண்டு வெளிப்படுத்தப்படாதனவாகவும் இருக்க வேண்டும்.
முன்னதையே திரும்பவும் கூறுவதோ, விரிவுபடுத்தி விளக்குவதோ ஆய்வாகாது.
புதுவதாகக் காண்கிற முடிபுகளை நோக்கிய நெறிமுறைகளே (றிக்ஷீஷீssமீs ஷீயீ பீவீsநீஷீஸ்மீக்ஷீவீஸீரீ sஷீனீமீtலீவீஸீரீ ஸீமீஷ்) எனப்படும். (தொல்காப்பியர் தந்த புதுமுறை இதுவாகும். அகப்பாடல்கள் இயற்பெயரோ, அது தொடர்பான மறைமுகக் குறிப்புகளோ, நெடுநல்வாடை பாடல் கேள்விக்கு உரியதாகவும், கொள்ளுதல்)
எவை எவை ஆராய்ச்சி என்பதும் எவை எவை ஆராய்ச்சி அல்ல என்பதும் ஒன்று எனினும் எதிர்மறை முகம் என்று இதைக் குறிப்பிடுவர்.
முன்பே அறியப்பட்ட ஆய்வுகளை வைத்துக் கொண்டு கவனத்தை ஈர்ப்பது ஆய்வாகாது.
13
முன்பே வெளிப்படுத்தப்பட்ட மெய்ம்மைகளின் விளைவு ஆய்வாகாது.
சித்தாந்தங்களை (ஞிஷீநீtக்ஷீவீஸீமீs) அடுக்கிக் கொண்டே செல்வதும், கணித்தறியக் கூடிய மெய்ம்மைகளைப் பேசாமல் விட்டு விடுவதும் ஆய்வாகாது.
ஆய்வு நோக்கமின்றி எழுதப்படும் கட்டுரைகளும் ஆய்வாகா.
சிறந்த ஆய்வுத் திறனுக்கே பட்டம்
டாக்டர் பட்டம் பெறாத அறிஞர்களும் உண்டு. இளம்பூரணர், மறைமலையடிகள், திரு.வி.க. விபுலானந்த அடிகள், இளவழகனார், மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள்.
ஆய்வறிஞராயின் ஆய்வுக்கட்டுரைகள் அண்மையில் வெளிவந்துள்ளனவா என்று காண்பர்.
மற்ற துறைகளுக்கு இணையாய்த் தமிழ் ஆய்வும் வளருவதற்கு ஆய்வியல் அணுகுமுறை மிகுந்த அவசியமாகும்.
ஆய்வு நாகரிகம்
ஒருவர் கருத்தை அவருடையதென்றே கூறுவதும், தம் கருத்தை மாற்றிக் கொள்ள ஆயத்தமாய் இருப்பதும் ஆய்வு மரபு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக