வெள்ளி, 24 செப்டம்பர், 2010

அறிவியலாய்வின் இருவகை

  1. அடிப்படை ஆய்வு,
  2.  பயன்பாட்டாய்வு
அணுவைப் பிளக்கலாம் என்பது அடிப்படை ஆய்வு.
அதிலிருந்து விண்வெளிக் கலமும், அணுகுண்டும் கண்டது பயன்பாட்டாய்வு.
ஆய்வு வேறுபாடு முறை பற்றியதன்று. முடிவு பற்றியதுமன்று. நோக்கம் பற்றியதேயாகும்.
பயன்பாட்டாய்வு வாணிக வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பயன்படும். அது ஆய்வுக்கட்டுரைக்கு அடித்தளமாகாது.
இலக்கியத் துறையில் ஆய்வு
முதன்மை ஆய்வு, துணைமை ஆய்வு என இருவகையாகும்.
தொல்காப்பியரைப் போல, நன்னூலார் போல கொள்கை விதிகளைக் கண்டறிந்து கூறுபவரே .ஆய்வாளரெனில் நாம் ஆய்வாளர்கள் ஆக இயலாது.
அவர்கள் செய்ததை முதன்மை ஆய்வு எனவும் நாம் செய்வதைத் துணைமை ஆய்வு எனவும் குறிப்பிடலாம்.
முதன்மை ஆய்வுகளுக்கே நோபல் பரிசு வழங்கப்படுதலால் அவ்வகை ஆய்வும் குறைந்து விடவில்லை.
17
பொருளியல் துறையில் மால்தூசியன் மக்கட்தொகைக் கொள்கை அடிப்படை ஆய்வாகும்.
அக்கொள்கையைக் கொண்டு பல்வேறு நாட்டிலுள்ள சிக்கல்களை ஆய்வது பயன்பாட்டாய்வாகலாம்.
பாடலுட் பயின்றவை நாடுங்காலை, பாடல் சான்ற புலனெறி வழக்கம்
புலன் நன்குணர்ந்த புலமையோரே
யாப்பென மொழிப யாப்பறி புலவர் எனத் தொல்காப்பியர் அத்துறை சார்ந்த முன்னோடிகளை மதித்துக் கூறுவது அவர் தமக்கு முன்னிகழ்ந்த ஆய்வனைத்தையும் அறிந்திருப்பதைச் சுட்டுகிறது.
18
தமிழின் ஆய்வுகள் பகுப்பாய்வு விளக்கமுறை பற்றியன.
பகுப்பாய்வுகள் வெறும் சித்தாந்தங்களாகவோ, விளக்கவுரைகளாகவோ நின்று விடாமல் புதிய மெய்ம்மைகளைக் கண்டறிந்து சொல்ல வேண்டும்- ஆய்வு விதி.
தமிழ் ஆய்வுகள் இன்று உள்ளதை விளக்குவனவாக அமைகின்றன.
19
ஆய்வுப் பயன்
சமுதாய முன்னேற்றமாகிய பொதுநலனைக் கருதிய ஆய்வுகளே மதிக்கத்தக்கவை.
இலக்கியம், கலை ஆகிய துறைகளிலும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற ஆய்வுகளே பயன் தருவன.
20
ஆய்வுப் பயன் உண்மை காணுதலும், சமுதாயப் பயன்பாடும் என்பதை மறத்தல் கூடாது.
அறிவியலை வளர்த்தவர்கள் தனிப்பட்ட சிந்தனையாளர்களும் ஆய்வறிஞர்களுமேயாவர்.
அறிவு வளர்ச்சிக்கோ, மனித வாழ்வுக்கோ பயன்படாத ஆய்வுகள் சிறப்புடையன ஆகா.
ஆய்வு தோன்றுமிடம்
சிக்கல் தோன்றுமிடத்தில் தீர்வு காணும் ஆர்வமும் ஆய்வும் தோன்றுகிறது.
வாழ்வில் சிக்கல்களைத் தீர்பதில் மக்கள் காட்டும் உறுதிப்பாடே ஆய்வு பிறக்கக் காரணம் எனலாம்.
எச்சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் ஆய்வு தேவை.
அழிவைத் தூண்டும் சக்திகளையும் ஆக்கத்திற்கு மாற்றி விடும் வழியில் மேற்கொண்டு வெற்றி பெற்றால், இன்பம் காண இயலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக