வெள்ளி, 24 செப்டம்பர், 2010

ஆய்வும் ஆய்வேடும்

ஆய்வு என்பதன் சொல்லும் பொருளும்
ஆய்வு - ஏதேனும் ஒன்றை மிக்க கவனத்தோடும் விடா முயற்சியோடும் நுட்பமாய்த் தேடுவது
அந்த ஒன்று என்பது பல புதிய மெய்ம்மைகளைச் சுட்டும்.
அத்தகைய அடிப்படையான மெய்ம்மைகளைத் தேடிக் காண்பதே ஆய்வாகும்
ரிசர்ச் என்னும் ஆங்கிலச் சொல் சிசெர்ச்சர் என்னும் பிரெஞ்சு மொழியின் வழிப்பட்டதாகும்.
இதற்குத் தேடுதல் என்று பொருள்.
ஒன்றைப் பற்றி நுணுக்கமாகத் தேடும் திறன் - தேடுதல்
உண்மையைக் கண்டறிய உந்துகிற நாட்டம் ஆய்வு
எப்பொருள் பற்றியும், அதன் மெய்ம்மைத் தன்மை கண்டறிகிற உத்தி பற்றியும், அறிவியல் முறையிலான புலனாய்வுக்கும்  ஆய்வு என்று பெயர்.
ஆய்வு ஆதாரங்களை சொந்தமாகவும் நேரடியாகவும் கற்று உணர வேண்டும்.
ஆய்தல் என்ற சொல்லுக்குத் தமிழில் உள்ளதன் நுணுக்கம் என்று பொருள். (தொல்காப்பியம், 813)
இது முன்பு உள்ளதொன்றை மேலும் நுணுகுதல் என்று பொருள்படும்.
ஆய்இழை எனில் மிக நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன் என்று பொருள்.
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை - என்னும்போது நண்பர்களை நுட்பமாகத் தேடி ஆராய்ந்து கொள்ள வேண்டும் எனத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். (திருக்குறள் 792)



உலக வழக்கில் கீரையை ஆய்க.
ஆய்தல் என்பதும் ஆராய்தல் என்பதும் ஒன்றேயாகும்.
ஆர் என்பதற்கு அரிய என்னும் பொருளும் உள்ளதால் ஆய்வும் அரிய வகையாகவே ஆயிற்று. ஆரதர் = ஆர் + அதர் = ஆர் என்பது அரிய; அதர் என்பது வழி.
திருவள்ளுவர் ஆராய்ந்த சொல்வன்மை, ஆராய்ந்த கல்வி என்னும் இருவகைகளை மெய்ப்பாட்டில் குறிக்கிறார்.
இதில் ஆராய்ச்சி என்பதும் ஒரு மெய்ப்பாடாகும். (தொல்காப்பியம் -1206)
இளம்பூரணர் உரை - ஆராய்தல் எனினும், தேர்தல் எனினும், நாடல் எனினும் ஒக்கும் (தொல்காப்பியர் இளம்பூரணர் உரை:- தொல், பொருள், மெய்ப்பட்டியல் நூல் 12.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக