வெள்ளி, 24 செப்டம்பர், 2010

ஆய்வு மரபு.







  • பிறருடைய ஆய்வுத் திறன் காணும்பொழுதில் பாராட்டும் மனப்பான்மை இருக்க வேண்டும்.



  • தம்மில் சிறிய பதவியுடையவரிடமும் ஆய்வுத் திறன் வெளிப்படுத்தும் திறனிருப்பின் போற்ற வேண்டும்.



  • ஆய்வுத் திறமையைப் பாராட்ட மறுப்பதும் தவறு ஆகும்.



  • ஆய்வு நாட்டம் இலாதவரை பட்டம் கருதி வானளாவப் புகழ்வது பெருந்தவறு.



  • இக்குறைகளை நீக்குவதே ஆய்வுப் பண்பாடு ஆகும்.



  • செய்யக்கூடாத தவறுகள்



  • பிறர் கருத்தை மேற்கோளாகச் சுட்டலாம்; ஆனால் தம்கருத்துப் போல வெளியிடக் கூடாது.



  • ஆய்வுத் துறையில் திருட்டு என்பது அறிவுத் திருட்டு எனக் கொள்ளப் பெறும்.



  • இது மிகுந்த தண்டனை தரப்பட வேண்டியதாகும்.



  • ஆணவம், மீயுயர் மனப்பான்மை, தற்செருக்கு ஆய்வுக்கு ஆகாததாகும்.



  • எளிமை, அடக்கம், தற்சார்பின்மை ஆய்வை வளர்க்கும்.



  • காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்



  • ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்



  • உற்றகுணம் தோன்றா தாகும்; உவப்பதன்கண்



  • குற்றமும் தோன்றாக் கெடும் (முனைப்பாடியார் அறநெறிச்சாரம் 41)



  • நடுநிலை சான்ற ஆய்வறத்தைச் சுட்டும் இது.



  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக