ஆய்வு முடிபுகள்
மெய்ம்மைகள், கொள்கை விதிகள், பொதுநீர்மைகள் என்பன.
அறிவு எனினும் அறிவியல் எனினும் ஒன்றே (நாலெட்ஜ், சயின்ஸ் ஒரே பொருளுடையன)
சோதனையிடப்பட்டதும் ஒழுங்குபடுத்தப்பட்டதுமான அறிவு அறிவியல் எனப்படும்.
மெய்ம்மை சார்ந்த ஆதாரச் சான்றுகளை ஒழுங்காகவும், வரன்முறையாகவும் தொடர்புபடவும் நிரல்பெற வைப்பதே அறிவு, அறிவியல்.
ஆய்வு மதிப்புகள்
தொழிற்புரட்சி ஏற்பட்ட இந்த மூன்று நூற்றாண்டுகளையும் ஆய்வுயுகம் எனக் குறிப்பிடலாம்.
அறிலியல் புரட்சியின் வாயிலாக ஆய்வுகள் பல்கிய காலம் இது.
எளிமை மனப்பான்மையும் விடா முயற்சியுமே உயராய்வின் அடிப்படைகள் எனலாம்.
ஆய்வின் பயனாக,
சில விதிகளையும் கொள்கை மரபுகளையும் காணுதல்
புதிய கருத்தமைதிகளையும் உயர் தரங்களையும் காணுதல்
நிகழக் கூடியனவற்றை முன்கூட்டிக் கண்டறிதல்
ஆய்வாளனின் பணி வேறுபாடுகளை ஒன்றிணைப்பதேயாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக